அமெரிக்காவில் நடைபெறவுள்ள குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா பிரதமர் சென்றுள்ளார்.
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அமெரிக்காவில் நடைபெற உள்ள குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் நாளை பங்கேற்க உள்ளார். இதனை தொடர்ந்து நாளை மறுநாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும் உரையாற்றவுள்ளார். இதற்காக மோடி தனி விமானம் மூலம் வாஷிங்டன் சென்றடைந்தார்.
அங்கு அமெரிக்காவுக்கான இந்தியா தூதர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் அமெரிக்கா ராணுவ படை தளபதிகள் உள்ளிட்டோர் மோடியை வரவேற்றனர். குறிப்பாக விமான நிலையத்திலும் பிரதமர் மோடி தங்கவுள்ள விடுதியிலும் காத்திருந்த இந்தியா வம்சாவளியினர் அவருக்காக உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜோ பைடன் தலைமையில் நாளை வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த மார்ச்சில் காணொளி மூலம் நடந்த இந்த மாநாட்டில் பங்கேற்ற மோடி முதல் முறையாக தற்போது நேரடியாக பங்கேற்க உள்ளார். இதில் கொரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர். இதற்கிடையில் அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸை இன்று சந்திக்கவுள்ள மோடி அமெரிக்கா தொழிலதிபர்களுடனான கலந்துரையாடலிலும் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் புதிய அரசு அமைந்த பின் முதல் முறையாக மோடி அங்கு சென்றுள்ளார்.