உரிய ஆவணங்கள் இன்றி 3,40,000 கொண்டு வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மார்க்கத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 3,40,000 ரூபாய் பணத்தை எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்பின் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் இளங்கோவன் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு வந்ததும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடமிருந்து பறிமுதல் செய்த 3, 40,000 ஆயிரம் ரூபாய் பணத்தை அலுவலர் நாகராஜனிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்துள்ளனர்.