உள்ளாட்சி பதவிகளுக்காக அலைமோதி வந்து வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் வருகின்ற 6-ம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் 3773 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஆறு நாட்களில் 9,129 நபர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். பின்னர் கடைசி நாள் அன்று அதிகமானோர் வேன், டிராக்டர், மினி லாரி போன்றவைகளில் ஆரவாரம் செய்து வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்ததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒரே நாளில் 1749 நபர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதுவரை இம்மாவட்டத்தில் மொத்தமாக 13,878 நபர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.