தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதை அடுத்து உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதனால் வேலூர், நெல்லை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.