டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பிக்கும் முறை, பொது தகுதிக்கான நிபந்தனைகள், வயது வரம்பு சலுகைகள், இட ஒதுக்கீடு, பாடத்திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அறிவுரைகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி one time registration ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். புகைப்படம், கையொப்பம் தெளிவாக இல்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.