துபாயில் அடுத்த மாதம் துவங்க உள்ள உலக கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
உலக கண்காட்சியானது அடுத்த மாதத்தில் துபாயில் துவங்கவுள்ளது. இந்த Expo 2020யில் இந்தியா உள்ளிட்ட 192 உலக நாடுகள்பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இக்கண்காட்சியை பார்வையிட ஒருவருக்கு கட்டணத் தொகையாக 95 திர்ஹாம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 2 கோடிக்கும் மேல் மக்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது அங்குள்ள முதலீட்டு பூங்காவில் சுமார் 1080 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதனையடுத்து இந்த கண்காட்சியானது “மனதை இணைத்தல்; எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 1 ஆம் தேதி துவங்கவுள்ள இந்த கண்காட்சியானது அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அதாவது ஆறு மாதங்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் உலக அளவிலான நாடுகள் தங்களின் கலை, பாரம்பரியம்,தொழில், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், வருங்கால சிந்தனை, புதிய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதில் புரட்சி ஏற்படுத்துவதற்கான செயல்பாடுகள் போன்றவற்றை இடம் பெறச் செய்வர். அதிலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கண்காட்சியில் சர்வதேச அளவிலான நாடுகள் பங்கு கொள்ளும். குறிப்பாக முதல் உலக கண்காட்சியானது 1851ம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. மேலும் கடந்த கண்காட்சியானது இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்தது.