தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவு பெற்ற நிலையில், மொத்த வேட்புமனுக்களில் விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 9 மாவட்டங்களிலும் மொத்தம் 97,831 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
அதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72,071 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15,967 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளது. அதனைப்போலவே ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,671 வேட்பு மனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,122 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 25-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.