உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பணி குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது.
எனவே இம்மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.