பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மர் எதிர் அணியின் கோல் கீப்பரை கீழே தள்ளி விட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரான்சில் நடந்துவரும் கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி – மெட்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் சம நிலையில் இருந்த நிலையில், போட்டியின் கடைசி நிமிடத்தில் பி.எஸ்.ஜி ஹக்கீமி ஒரு கோல் அடித்தார். இதனால் பி.எஸ்.ஜி அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதையடுத்து பி.எஸ்.ஜி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பி.எஸ்.ஜி அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே மெட்ஸ் அணியின் கோல்கீப்பரிடம் ஏதோ சொன்னதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மெட்ஸ் அணியின் கோல் கீப்பர் ஓடி சென்று எம்பாப்பேவிடம் வாக்குவாதம் செய்ய முயன்றார்.
அப்போது நெய்மர் குறுக்கிட்டு கோல் கீப்பரை கீழே தள்ளி விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எனவே நெய்மர் உட்பட இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.