கொடைக்கானலில் யானைகள் நடமாட்டத்தால் மோயர்பாயிண்ட் உள்ளிட்ட குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலங்களான மோயர்பாயிண்ட் பகுதிகளில் நேற்று இரவு யானை கூட்டம் பேரிஜம் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி மோயர்பாயிண்ட் சுற்றுலாத் தலத்தில் உள்ள சாலையோர கடைகளை இடித்து முற்றிலும் சேதப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை கூட்டம் அப்பகுதியில் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் திலீப் அறிவுறுத்தலின் படி அந்த பகுதியில் சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.