Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பூந்தமல்லி சாலையில் 11 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்….!!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் பூந்தமல்லி சாலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது தற்கொலை செய்துகொள்வதாக பெண்கள் மிரட்டல் விடுவதால் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 11 கடைகள் கட்டப்பட்டுள்ளன.

அந்த கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி இந்து அறநிலையத்துறை இறை ‌ஆணையர் கவிமணி கடைகளை அகற்ற உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அறநிலைத்துறை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். அதோடு மற்றொரு பெண் மாடியில் இருந்துகொண்டு கீழே இருக்கும் காவல்துறையினர் மீது மண்ணெண்ணெய் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |