Categories
அரசியல்

திடீர் ட்விஸ்ட்…! திமுகவுக்கு ஆதரவு….! அறிக்கை வெளியிட்ட பிரபல கட்சி….!!

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி திமுக வுக்கு ஆதரவளிக்க போவதாக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

புதிதாக பிரிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், 9மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

ரவி பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஜனநாயக கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் திமுக வுடன் இணைந்து தேர்தல் களப்பணி ஆற்றி திமுக வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஐஜேகே கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியிலும், சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதிமயம் கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |