கர்நாடக சட்டசபையில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சித்தராமையா தொடர்ந்து சட்டசபையில் பேசிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடரின் எட்டாவது நாள் கூட்டம் விதான் சவுதாவில் தொடங்கியது. அப்போது கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான விவரங்களை எடுத்துக் கூறி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது சீதாராமையாவின் வேஷ்டி தீடிரென அவிழ்ந்தது கூட தெரியாமல் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தார். இதனை கவனித்த மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தனது இருக்கையை விட்டு எழுந்து சீதாராமையாவின் காதருகே உங்கள் வேஷ்டி வைத்துள்ளது என்று கூறினார். உடனே சுதாரித்த சித்தாராமையா சுதாரித்துக்கொண்டு வேஷ்டியை சரி செய்து கொண்டார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.