Categories
மாநில செய்திகள்

வாக்களிக்க மாட்டோம்…. வாக்களிக்க மாட்டோம்…. உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்…!!!

செஞ்சி அருகே தனி ஊராட்சி வேண்டி உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ஆவியூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதால் அந்த கிராமத்தினரே ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். குறைந்த ஓட்டுகள் உள்ள விற்பட்டு கிராமத்தை யாரும் கண்டுகொள்ளாததால் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் வேதனையில் இருக்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அவர்கள் மாற்று யோசனையில் ஆழ்ந்துள்ளனர்.

இதனடிப்படையில் அடிப்படை வசதிகளை பெற முடியாத நிலையில் உள்ளதால் தனி ஊராட்சி வேண்டி உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சுவரொட்டிகள் ஒட்டியும், பேனர்கள் வைத்தும் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தியும் பொதுமக்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த செஞ்சி வட்டாட்சியர், வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர் விற்பட்டு கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே விற்பட்டு கிராமத்தில் ஒட்டப்பட்ட தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்களை அவியுர் கிராமத்தினர் கிழித்து எறிந்திருப்பதால் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.

Categories

Tech |