Categories
அரசியல்

தப்பு செஞ்சவங்க யாராக இருந்தாலும்…. சும்மா விட மாட்டோம்…. அமைச்சர் ஐ.பெரியசாமி…!!!

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், கூட்டுறவு துறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளன. அவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. மிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எந்த அளவுக்கு அதிமுகவினர் முறைகேடுகள் செய்துள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது தகுதியுள்ள அனைவருக்கும் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முறைகேடு ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நகையை இல்லாமலும், கவரிங் நகைகளை வைத்தும் கடன் வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி பயிர்க்கடன்களிலும் ஏராளமான மோசடிகள் நடைபெற்றுள்ளது. ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் வழங்க வேண்டுமென்றால் 80 ஆயிரம் வழங்கியுள்ளனர். விவசாயம் செய்யாதவர்களுக்கு கூட 3 லட்சம் வரை கடன் கொடுத்துள்ளார்கள். தரிசு நிலங்களுக்கும் கடன் வழங்கி உள்ளனர். ஒரு வரைமுறையே இல்லாமல் இஷ்டப்படி கடன் வழங்கி உள்ளனர். குவாரி நிலங்களுக்கு கூட கடன் வழங்கி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |