பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உணவு உண்ட பில்லை கண்டு கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியில் உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ரவால்பிண்டியில் மூன்று நாள் கொண்ட போட்டியும் லாகூரில் ஐந்து டி20 போட்டிகளும் கடந்த 17 ஆம் தேதியன்று தொடங்கியது. இதற்காக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. இந்த விளையாட்டு போட்டிகள் தொடங்குவதற்கு முன்னரே நியூசிலாந்து அணி வீரர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக அச்சுறுத்தல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் உடனடியாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறினர்.
இவ்வாறு போட்டியை தீடிரென நியூசிலாந்து ரத்து செய்ததினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஓட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் பாதுகாப்பிற்காக 5 எஸ்பிக்கள் மற்றும் 500 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் போலீசார் 27 லட்ச ரூபாய்க்கு பிரியாணி மட்டும் சாப்பிட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து அறிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தினமும் இரண்டு வேளை பிரியாணி உண்டுள்ளனர். இதற்காக பில் தொகை ரூபாய் 27 லட்சம் உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை உணவாக நிர்வாகம் பாகிஸ்தான் நீதித்துறை அமைச்சகத்துக்குஅனுப்பியுள்ளது. அவர்கள் இன்னும் இதற்கான தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இது தவிர மற்ற உணவுகள் உண்டதற்கான பில் தொகையானது இன்னும் வரவில்லை.
குறிப்பாக இப்பணியில் காவலர்கள் மட்டுமின்றி கமாண்டோ பிரிவினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் ஆகியோரும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நியூசிலாந்து விளையாட்டு தொடரை ரத்து செய்ததால் நிதி நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் மறுபடியும் இந்த பிரியாணி பில்லைக் கண்டு அதிர்ச்சியில் உள்ளனர். அதிலும் அவர்கள் இந்த தொகையை எவ்வாறு செலுத்தப்போகிறார்கள் என்று கேள்வி அனைவரின் மனதிலும் இருக்கும்.