Categories
தேசிய செய்திகள்

‘ஹேய் பல்லே பல்லே’…. பஞ்சாப் முதல்வரின் ஜாலி டான்ஸ்… வைரலாகும் வீடியோ…!!!!

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ஜாலியாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அம் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார். கடந்த திங்கள்கிழமை இவர் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அவர் முதல்வராகியுள்ளதால் அம்மாநிலத்தின் முதல் தலித் முதல்வர் என்ற பெருமையை பெறுகிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் கல்லூரி மாணவர்களுடன் ஜாலியாக நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கபுர்தாலாவில் உள்ள ஐ.கே.குஜ்ரால் பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற அவர் பஞ்சாப் பாடகர் குர்மன் பிர்டி எழுதிய ‘பங்க்ரா பொலியன்’ என்ற பாடலுக்கு பாரம்பரிய உடை அணிந்து மாணவர்களுடன் இணைந்து நடனம் ஆடினார். இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |