கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் செந்தில் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் மறுபரிசீலனை நடைபெற்றது. அதில் இரண்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டிய முன்னாள் எம்எல்ஏ பிரபு உள்ளிட்டோர் முற்றுகையில் ஈடுபட்டனர். தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில், முன்னாள் எம்எல்ஏ பிரபு உள்ளிட்டோர் முற்றுகையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரவு 10 மணிக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.