Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: 2ஆவது சுற்றில் நுழைந்த இந்திய வீரர்….!!

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தோனேசிய வீரர் டாமி சுகியார்டோவை வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் சுபான்கர் டே அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று பாரிசில் தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் சுபான்கர் டே (54ஆவது ரேங்க்), இந்தோனேசிய வீரர் டாமி சுகியார்டோ (19ஆவது ரேங்க்) ஆகியோர் மோதினர். இதில் சுபான்கர் முதல் செட்டை 15 – 21 என்ற கணக்கில் டாமியிடம் இழந்தார்.எனினும் அடுத்த இரண்டு செட்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுபான்கர் இரண்டு செட்டையும் 21 – 14, 21 – 17 எனக் கைப்பற்றினார். இதன்மூலம் இந்தோனேசியாவின் டாமி சுகியார்டோவை வீழ்த்திய சுபான்கர் டே இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

Categories

Tech |