தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் 4 பக்க விளக்க அறிக்கையில் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும், ஒன்றிய நிதி அமைச்சருக்கும் அனுப்பியிருக்கிறார். இவ்விளக்க அறிக்கை அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டத்தை அறியாமல் பாஜகவினர் சமூக வலைதளங்களில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்து தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், ஜி.எஸ்.டி. கூட்டத்திற்கு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரான ஜெயக்குமார், நிதியமைச்சர் பழனிவேல் சொல்லாதது குறித்தும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து நான் அனுப்பிய 14 பக்க அறிக்கையானது ஒன்றிய அமைச்சர் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக் கொண்டது.இதை பகிர்வதற்கு முன்பு சில பெரியவர்களுக்கும் முட்டாள்களும் ஜிஎஸ்டி கவுன்சில் விதிமுறைகளை பற்றிய அறிவின்மையை வெளிப்படுத்த காத்திருந்தேன்.
ஆனால் இதில் முன்னாள் அமைச்சரே மாட்டுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. இதைப்போல் இன்னும் நிறைய வேடிக்கைகளுக்கு நான் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறேன். மேலும் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் நிதித்துறை செயலாளர் சார்பாக என்னுடைய கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது” எனவும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
I WAITED to snare bigots & morons into exposing their ignorance of GST Council norms, BEFORE I posted the 14-page note I sent (ACCEPTED by Hon'ble Union FM & Council & RECORDED)
+ TN Fin Sec voiced my inputs
But NEVER expected to land big fish ex-Min😮
Expect more FUN FACTS🤣 https://t.co/xLZl8Osyhz
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) September 22, 2021