இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எழுவனி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் காரியாபட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ராமச்சந்திரனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இராமச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.