Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் குற்றங்கள்…. தமிழகம் முழுவதும் ரவுடிகளின் வீடுகளில்…. போலீசார் ரெய்டு…..!!!!!

தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்க கூடிய வகையில் ரவுடிகளின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை மற்றும் விசாரணையை மேற்கொண்டனர். இந்தச் சோதனையை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் படி துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையில் சோதனை நடத்தி ரவுடிகளின் வீடுகளிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.

அதன்படி காவல்துறை அதிகாரிகள் சென்னை புளியந்தோப்பில் உள்ள 50க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீட்டில் திடீரென இரவில் அதிரடி சோதனை நடத்தி வந்தார்கள். இதனை தொடர்ந்து திண்டுக்கல் ,பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ரவுடிகளை கைது செய்தனர் .மேலும் கன்னியகுமாரியில் சோதனை செய்த போலீசார் நடவடிக்கைகளை மீறிய ரவுடிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் தமிழகத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |