பெண்ணை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் நாகம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் அருகே இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவர் நாகம்மாளின் குடத்தை எட்டி உதைத்துள்ளார்.
இது குறித்து நாகம்மாள் வேல்முருகனிடம் கேட்டபோது அவருடன் இருந்த 4 பேரும் பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு நாகம்மாள் காவல் நிலையத்திற்கு சென்று வேல்முருகன் உள்ளிட்ட 4 பேர் மீதும் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேல்முருகன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.