போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் அருப்புக்கோட்டை சிவகாசி சாத்தூர் உள்ளிட்ட 8 போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் போராட்டமானது தொழிலாளர் முன்னேற்ற சங்க மண்டல பொதுச்செயலாளரான ராஜா செல்வம் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் மத்திய அரசு வேளாண் சட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் 250 பேர் கலந்து கொண்டனர்.