Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

 சாத்தூர் அருகே பரபரப்பு…. ஈ.பி.எஸ் முன்னிலையில் சண்டை போட்ட அதிமுகவினர்… போலீசார் குவிப்பு..!!

 சாத்தூர் அருகே ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஊரக உள்ளாட்சி தேர்தல் பரப்புரைக்காக தென்காசி மாவட்டத்திற்கு செல்லும் முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிசாமிக்கு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. விருதுநகர் மாவட்ட செயலாளராக உள்ள ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியுடன் கே.டி ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்..

வரவேற்பு முடிந்து எடப்பாடி பழனிசாமி கார் சிறிது தூரம் சென்ற போது ‘ராஜேந்திர பாலாஜி ஒழிக’ என்று ரவிசந்திரன் ஆதரவாளர் ஒருவர் கத்தியதாக கூறப்படுகிறது.  இதனால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தரப்புக்கும், தற்போது விருதுநகர் மாவட்ட செயலாளராக உள்ள ரவிச்சந்திரன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடுத்தும் இருதரப்பினரும் மாறி மாறி கடுமையாக தாக்கி கொண்டனர்..

இதனால் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவினர் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Categories

Tech |