Categories
மாநில செய்திகள்

கோவில் நகைகளை…. தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி…. அமைச்சர் சூப்பர் யோசனை…!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியமைத்ததையடுத்து பல துறைகளிலும் மாற்றங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக இந்துசமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் அறநிலைத் துறை அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு, தமிழக சட்டமன்றத்தில் இந்து அறநிலைத்துறை அறக்கட்டளையின் சார்பில் இயற்றப்பட்ட அறிவிப்புகளை குறித்து  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கோவில் திருப்பணிகளானது கோவில்களில் உள்ள பயன்பாட்டில் இல்லாத நகைகளை,  வங்கியில் தங்க பிஸ்கட்களாக மாற்றி வைப்பதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். வருவாய்த்துறை மூலம் சட்டப் போராட்டம் நடத்தி இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலங்கள் மீட்கப்படும்” என்று கூறினார்.

Categories

Tech |