Categories
உலக செய்திகள்

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி…. குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பு…. துணை அதிபருடன் கலந்துரையாடல்….!!

குவாட் உச்சி மாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்கா துணை அதிபரை சந்தித்து பேசியுள்ளார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்பின் உச்சி மாநாடானது வாஷிங்டனில் இன்று நடைப்பெற இருக்கிறது. அதிலும் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு அவரை சந்திப்பதற்காக பிரதமர் மோடி அங்கு முதல் முறையாக சென்றுள்ளார். இந்த உச்சி மாநாட்டில் ஆப்கானில் நிலவும் சூழல், சீனாவின் ஆதிக்கம் செலுத்தும் தன்மை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் செயல்கள் மற்றும் இந்தியா- அமெரிக்கா இடையேயான கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது போன்ற பல முக்கியமான விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளன.

இதனை தொடர்ந்து அந்நாட்டின் துணை அதிபரை இந்தியா பிரதமர் சந்தித்துள்ளார். இதன் பின்னர் இருவரும் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதற்குப் பின்னர் இருவரும் சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான  முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டுள்ளனர். மேலும் இரு நாடுகளின் சக்திவாய்ந்த கூட்டாண்மை, வளர்ந்து வரும் புதிய தொழில் நுட்பங்கள் சுகாதாரம், கல்வி மற்றும் பி 2 பி வணிக இணைப்புக்கள் குறித்து விவாதித்துள்ளனர். இது குறித்து ஊடகவியலாளர்களிடம் கமலா ஹாரிஸ் பேசியுள்ளார். அதில் “இந்தியா அமெரிக்காவின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவராகும்.

அதிலும் பொது மக்களுக்கு தேவையான நேரத்தில் தடுப்பூசி ஆதரவை அளித்துள்ளனர். இதனைக் கண்டு அமெரிக்கா பெருமை அடைகிறது. குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்பின் போது எங்கள் இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டோம்.இதனை தொடர்ந்து கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் தடுப்பூசி எவ்வளவு முக்கியமானது என்பதை காண்பிக்க இந்தியா மற்ற நாடுகளுக்கு சான்றாக விளங்கியது. குறிப்பாக இந்தியா பருவநிலை மாற்றத்தையும் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது என்பதும் எங்களுக்கு தெரியும். அதிலும் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படுவதால் எங்கள் நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல விளைவை ஏற்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் பிரதமர் மோடி ‘கொரோனா தொற்று பாதிப்பின் போது எங்களுக்கு உதவி செய்ததற்காக அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதில் “அமெரிக்காவின் துணை அதிபராக தாங்கள் தேர்வு செய்யப்பட்டது மிக முக்கியமான வரலாற்று நிகழ்வு.  உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நீங்கள் முன் உதாரணமாக திகழ்கிறார்கள். அதிலும் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான இருதரப்பு உறவுகளும் விரைவில் புதிய உச்சத்தைத் தொடும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |