14 வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் சென்னை – பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
14 வது சீசன் ஐபிஎல் தொடரில் இரண்டாவது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ,விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 6 வெற்றி ,2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது .அதேபோல் 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3- வது இடத்தில் உள்ளது.
இதில் அமீரகத்தில் நடந்த முதல் போட்டியில் சென்னை அணி ,மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் அதே நம்பிக்கையுடன் இன்றைய போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி படுதோல்வி அடைந்தது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் பெங்களூர் அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதற்கு முன் நடப்பு சீசனில் இந்தியாவில் சென்னை -பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.