தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது. அதனால் ஏறத்தாழ 40% மேல் மழைப்பொழிவை தரும். அதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தாழ்வு மண்டலம் அல்லது புயல்கள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன.
அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக ஏரிகள், நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள் தூர்வாரப்படுகின்றன. மேலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால்களை ஒழுங்குபடுத்தும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகள் நடத்த உள்ளார்.
அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்களும், தலைமைச் செயலாளர்கள் உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார். பருவமழை முன்னேற்பாடுகளை பற்றி இதுவரை மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளை குறித்தும் முதல்வர் அதிகாரிகளை கேட்பார் என கூறப்படுகின்றது. பருவ மழையால் மக்கள் யாரும் பாதிக்கப்படாத வகையில் பணிகளை துரிதப்படுத்தவும் அவர் அறிவுரைகள் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.