Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

”செல்போன் டவர் வேண்டாம்” காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. தி.மலையில் பரபரப்பு….!!

செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கமண்டல நதி தெருவில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் தன்னுடைய காலியான நிலத்தில் தனியார் செல்போன்  நிறுவனத்தினர் புதிய டவர் ஒன்றை நிறுவ கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்துள்ளார்.  எனவே அந்த இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்குக்கான பணியை ஆரம்பித்த சமயத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதனை பாதியிலேயே போட்டுவிட்டனர். தற்போது அந்த செல்போன் டவரை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரணி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அப்போது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,  நீதிமன்ற உத்தரவை பெற்றாலும் எங்களது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவிப்போம்.  இவ்வாறு மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் செல்போன் டவர் அமைப்பதால் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு இதனால் குறைப்பிரசவம் ஏற்படும். மேலும் குழந்தைகளுக்கு ஊனம் மற்றும் பெண்களுக்கு மலட்டு தன்மையும்  ஏற்படலாம். எனவே செல்போன் டவர் அமைக்கும் வேலை நடக்காமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாக எழுதி வாங்கிய பிறகே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |