Categories
தேசிய செய்திகள்

இனி 8 மணி நேரம் மட்டுமே வேலை… செம அறிவிப்பு வெளியானது!!

பெண் போலீசாருக்கான பணி நேரத்தை 12 மணியிலிருந்து 8 மணி நேரமாக குறைத்தது மகாராஷ்டிரா அரசு.

நாட்டில் குற்றங்களை தடுப்பதில் முதன்மையாக இருப்பவர்கள் காவலர்கள். காவல் துறையில் சேரும் அனைவருமே இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.. குறிப்பாக இந்த காவல் துறையில் பெண்களும் ஆர்வத்துடன் சேர்ந்து பணிபுரிகின்றனர்.. அதே நேரத்தில் இரவு பகலாக பெண்கள் 12 மணி நேரம் பணியாற்றி வருகின்றனர்.. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

மகாராஷ்டிரா டிஜிபி சஞ்சய் பாண்டே கூறியதாவது, மகாராஷ்டிரா அரசு மகளிர் காவல் துறையினரின் வேலை நேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்க முடிவு செய்துள்ளது என்று கூறினார்.. இது பெண் காவலர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கிறது..

ஏனென்றால் இதற்கு முன் பெண் போலீசாருக்கான பணி நேரம் 12 மணி நேரமாக இருந்தது. பெண் போலீசார் மாதவிடாய் மற்றும் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட மிக சிரமப் படும் நிலையில், அவர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைத்துள்ளது மகாராஷ்டிரா அரசு.

 

Categories

Tech |