Categories
உலக செய்திகள்

மூடப்பட்ட திரையரங்குகள்…. 30 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு…. மகிழ்ச்சியில் சோமாலியா மக்கள்…!!

30 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கில் கண்டுகளித்த இரு குரும்படத்தால் சோமாலிய மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சோமாலியாவில் கடந்த 1991ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரில் திரையரங்குகள் தற்கொலைப்படைத் தளங்களாக மாறியதால் அவைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கள் திறக்கப்பட்டுள்ளன.

சோமாலியாவின் தலைநகர் மொகாதிசுவின் நேஷனல் திரையரங்கில் பலத்த பாதுகாப்புகளுடன் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 750 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனை மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.

இந்த திரையரங்கின் உரிமையாளரான அப்திகாதிர் அப்தி யூசுப் கூறுயதாவது, சோமாலிய மக்களுக்கு இந்த இரவானது சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது என்றும் பல்வேறு போராட்டங்களுக்கு பின் நிகழ்ந்த இச்சம்பவம் நாட்டு மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

இதன் மூலம், சோமாலியாவில் உள்ள பாடலாசிரியர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர் நடிகையருக்கு தங்களது திறமையை வெளிக்காட்ட சிறந்த மேடையாக அமைய கூடும் என்றும் தெறிவித்துள்ளார். குறிப்பாக இந்த திரையரங்கமானது சீன என்ஜினீயர்களால் கட்டித் தரப்பட்டதாகும்.மேலும் சீன தலைவரான மாசேதுங் பரிசாக வழங்கியது ஆகும்.

Categories

Tech |