ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டாம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமிகாந்தன் பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கோபம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.