ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டமானது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது,”தேர்தல் என்றாலே அதில் திமுகவானது எப்பொழுதும் தில்லுமுல்லு செய்யும் கட்சியாகும்.
உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடக்குமா? என்று தெரியவில்லை. தேர்தலில் அவர்கள் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மேலும் நகை கடன் விவகாரத்திலும் குழப்பம் நிலவி வருகிறது” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.