Categories
தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்தக்கூடாது…. ஜி-20 மாநாட்டில் இந்தியா வலியுறுத்தல்…!!!

ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்தக்கூடாது என ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா வலியுறுத்தியது.

நியூயார்க்கில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர் உள்நாட்டு போரால் வாழ்வாதாரத்தை இழந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க உலக நாடுகள் ஓர் அணிதிரள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து தீவிரவாதம் செயல்பட அனுமதிக்க மாட்டோம். என்ற உறுதிமொழியை தலிபான்களின் புதிய அரசு உலக நாடுகளுக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனிடையே ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள திரு. ஜெய்சங்கர் தென்கொரியா, இத்தாலி மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அந்தந்த நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்துவது, சுமூகமான பயணம், கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Categories

Tech |