தமிழர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இலங்கை அதிபர் உரையாற்றியுள்ளார்.
ஐ.நா.வில் உயரடுக்கு பொதுச்சபையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பங்கேற்று உரையாடியுள்ளார். அதிலும் இலங்கையின் நிலைத்த அமைதிக்கு தமிழர்களுடன் நல்ல உறவை பேண வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதில் “இலங்கை பிரிவினைவாத போரினால் சுமார் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மத தீவிரவாதிகளால் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலால் பெரும் பேரழிவை இலங்கை சந்தித்தது.
குறிப்பாக உலகளவில் உருவாகும் தீவிரவாதத்தை தடுப்பதற்கு உளவுத்துறை தகவல் பகிர்வும் சர்வதேச ஒத்துழைப்பும் அவசியமாகும். மேலும் நிலைத்த அமைதியை அடைவதற்கு உள்நாட்டு அமைப்புகள் வாயிலாக தமிழர்களுடன் அதிக பொறுப்புணர்வுடன் செயல்படுதல், சீர்ப்படுத்தப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்ல உறவை வளர்ப்பது போன்றவை மிக முக்கியமானதாகும். அதிலும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது சமமான அல்லது அதிக பங்களிப்பின் மூலம் தான் உறுதி செய்யப்படுகிறது.
குறிப்பாக சாதி, மதம், பாலினம் போன்றவற்றை கண்டுகொள்ளாமல் அனைத்து குடிமக்களும் நிலையான, செழிப்பான, பாதுகாப்பான வருங்காலத்தை ஏற்படுத்துவதே எங்கள் அரசின் தலையாய கடமை. இதற்காக உள்ளூர் தரப்பினருடன் ஆலோசனை செய்யவும், சர்வதேச கூட்டாளிகள் மற்றும் ஐ.நா.வின் ஆதரவை பெறவும் தயாராக உள்ளோம். அதிலும் கடந்த அரை நூற்றாண்டுகளாக எங்கள் நாட்டில் வன்முறையினால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிப்போகியுள்ளது. மேலும் நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது போன்ற வன்முறை சம்பவங்கள் மறுபடியும் இலங்கையில் நடக்காது. அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் வேலை செய்ய இருக்கிறோம். மேலும் எதற்காக இது போன்ற பிரச்சினைகள் எழுகின்றன என்பதை குறித்து ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை காணவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறியுள்ளார். குறிப்பாக இறுதியாக நடைபெற்ற போரில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போர் குற்றங்கள் தொடர்பாக 1,20,00,000 ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.