Categories
மாநில செய்திகள்

நகை, நிலம் இல்லாதவர்களுக்கும் வங்கியில் கடன்…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் விவசாய நிலம் மற்றும் நகை கடன் வழங்குவதில் முறைகேடு ஏற்பட்டுள்ளன என்று கூட்டுறவு ஐ.அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கூட்டுறவு துறையில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

அதன்படி விதிமீறல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கியில் நகை கடன் பற்றி ஆய்வு செய்தபோது நகை இல்லாதவர்களுக்கும் மற்றும் கவரிங் நகை உள்ளவர்களுக்கும் கடன் வழங்கியதாக தெரியவந்தது.

அதுமட்டுமில்லாமல் பயிர்க்கடனில் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் மட்டுமே வழங்க வேண்டும் .ஆனால் 80 ஆயிரம் வரை வழங்கியுள்ளார்கள். மேலும் விவசாயம் செய்தவர்கள், தரிசு நிலங்கள், குவாரி நிலங்கள் மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கும் அவர்கள் விரும்பியபடி கடன் வழங்கி உள்ளனர் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |