சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு சில மகிழ்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் 2002- 2003 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்களும் வருகின்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்ததுள்ளது.
அதன்படி அரியர் வைத்துள்ள மாணவர்கள் இன்று முதல் http://coe1.annauniv.edu என்ற இணையதளம் மூலம் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.5000 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான தேர்வு அட்டவணை, தேர்வு முறை மற்றும் தேர்வு மையம் போன்றவை அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.