வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ளது வேலூர் – திருவண்ணாமலை இரு மாவட்டங்களை ஒருங்கிணைந்த ஆவின் தலைமையகம்.. அதிமுகவின் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளரான வேலழகன் ஆவின் தலைவராக இருக்கிறார்.. இந்நிலையில் இந்த ஆவின் அலுவலகத்தில் கடந்த ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..
கடந்த 16ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் 18 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர்.. அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், 34 லட்சம், தங்கம், வெள்ளி அன்னிய செலவாணி டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டது..
பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.. அதனடிப்படையில் வேலூர் மாவட்ட லஞ்சஒழிப்புத் துறையினர் தற்போது ஆவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்..
வீரமணிக்கு நெருங்கிய வட்டாரங்கள் யார் என்றும், அவர் யார் மூலமாக சொத்து வாங்கினார் என்ற அடிப்படையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் அந்த விசாரணை வளையத்தில் வருகின்றனர்.. அதில் வேலழகனும் ஒருவர்.. அதன் அடிப்படையில் தற்போது ஆவின் பெருந்தலைவராக இருக்கக்கூடிய வேலழகன் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்..