நோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கு கோரி உலக சுகாதார அமைப்பிடம் இந்தியாவின் சீரம் நிறுவனம் மனு கொடுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது நோவோவேக்ஸ் தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனமும் அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனமும் இணைந்துதான் தயாரித்துள்ளனர். இதனை அடுத்து இந்த தடுப்பூசி 90 சதவீதம் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது என கடந்த ஜூன் மாதம் இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து நோவோவேக்ஸ் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்காக அனுமதி கேட்டு உலக சுகாதார அமைப்பிடம் இரு நிறுவனங்களும் மனு கொடுத்துள்ளது.
குறிப்பாக சர்வதேச தடுப்பூசி பகிர்ந்தளிக்கும் திட்டத்தின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கும் என இரு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. மேலும் நோவோவேக்ஸ் தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளை காட்டிலும் எடுத்துச் செல்வதற்கும் சேமித்து வைப்பதற்கும் மிகவும் எளிதானது என்பதால் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில் இரு நிறுவனங்களும் முக்கியம் பங்காற்றும் என கூறப்பட்டுள்ளது.