மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக கொல்கத்தா அணியின் கேப்டன் உட்பட வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்றைய 34- வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் குவித்தது .இதன்பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணி 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. இதில் ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் ஐயர் இருவரும் அதிரடியாக விளையாட கொல்கத்தா அணி 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது .
இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆட்டத்தின்போது கொல்கத்தா அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசவில்லை என புகார் எழுந்தது. இதனால் மெதுவாக பந்துவீசியதற்காக அணியின் கேப்டன் மார்கனுக்கு ரூபாய் 24 லட்சம் அபராதமும் ,அதோடு அணியில் உள்ள மற்ற 10 வீரர்களுக்கும் தலா ரூபாய் லட்சத்துக்கும் குறைவாக அல்லது போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.