Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முக்கிய சாலைகளில் தானியங்கி சிக்னல்கள்…. வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு…. தீவிரப்படுத்தப்படும் பணி….!!

சாலைப் பாதுகாப்பு நிதி மூலம் தானியங்கி சிக்னல் அமைக்கும் பணியில் போக்குவரத்துத் துறையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். 

பொள்ளாச்சியில் இருந்து உடுமலை, கோயம்புத்தூர் மற்றும் பல்லடம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் வாகனங்கள் அதிகமாக வந்து செல்கிறது. ஆனால் அதனை ஒழுங்குப்படுத்த எந்தவித சிக்னலும் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக சென்று விபத்தில் சிக்கிக்கொள்கின்றது. இதனைத் தடுக்க பொள்ளாச்சியில் உள்ள கோயம்புத்தூர் ரோடு மகாலிங்கபுரம் ஆர்ச், பல்லடம் சாலை 5 ரோடுகள் சந்திப்பு மற்றும் நெகமத்தில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சாலை பாதுகாப்பு நிதி மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் தானியங்கி சிக்னல்கள் பொருத்தும் பணி முடிவடைந்தவுடன் ஒரு நாள் முழுவதும் அந்த வழியே செல்லக்கூடிய வாகனங்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு சிக்னல்களில் நேரம் செட் செய்யப்போவதாகவும், சாலையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து அறிவிப்புப்பலகைகள் வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்காக சிக்னல்கள், அறிவிப்பு பலகைகள் வைப்பதோடு போக்குவரத்துத்துறையினர் அதனைத் தொடர்ந்து பராமரிக்கவும் வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் அவை பழுதடைந்து விட்டால் உடனே சரி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |