வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு யூனியனில் வருகின்ற 9-ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் திருக்குறுங்குடி டி.வி.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து வருகின்ற 12-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
இதனால் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத்சதுர்வேதி, தாசில்தார் இசக்கி பாண்டி, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர் முருகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.