Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள்…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவு துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பதிவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை உரிய காலத்திற்குள்  தாக்கல் செய்யாத  நிறுவனங்களை கண்காணிப்பது மாவட்ட பதிவாளர் பணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  அனைத்து நிறுவனங்களும் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் தங்களது ஆண்டு அறிக்கையை தயார் செய்து மாவட்ட பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத நிறுவனத்தின்  பெயர், பதிவு எண் மற்றும் செலுத்தப்பட வேண்டிய அபராத தொகை போன்ற அனைத்து விபரங்களையும் சேகரித்து, அனைத்து மண்டல ஐஜீ மற்றும் பதிவாளருக்கு அனுப்ப பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |