எதைப்பற்றியும் கலங்கிடாத கன்னி ராசி நேயர்களே..!! இன்று பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் இருந்த தடை தாமதங்கள் நீங்கும். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகள் ஏற்படும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். காரியங்களை நிதானமாக செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இன்று நீங்கள் ஆலய வழிபாட்டை மேற்கொண்டு வருவது சிறப்பு. குழந்தைகளுக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். பணவரவை பொருத்தவரை இன்று திருப்திகரமாகவே இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள். மனமகிழ்ச்சி ஏற்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள்.
வாகனத்தில்செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் பொழுதும் கவனம் இருக்கட்டும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம். அதை நீங்கள் மிகப் பொறுமையாக கடைபிடியுங்கள். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். குடும்பத்தாருடன் மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் இருந்த தடை விலகி கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குவது மிகவும் சிறப்பு. அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக முடியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் சிவப்பு நிறம்