Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இது வேண்டாம்.‌‌… திரண்டு வந்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

தங்களது வீட்டு பட்டாகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் கிராம அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வன்னிய நாதபுரம் பகுதியில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் பல வருடங்களாக தனியார் நிலத்தின் வழியாக சென்று வருகின்றனர். அப்போது திடீரென தனியார் நில உரிமையாளர் அவ்வழியாக யாரும் சொல்லாத வகையில் அடைத்துள்ளனர்.

இதனால் செல்வதற்கு வழி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு தங்களது வீட்டு பட்டாகளை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |