Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “ஒதுங்கி சென்றாலும் வம்புக்கு இழுப்பார்கள்”… கவனமாக இருந்து கொள்ளுங்கள்..!!

மற்றவர்களுக்காக ஓடாய் உழைத்து தேய்ந்து கொண்டிருக்கும் துலாம் ராசி அன்பர்களே.!! இன்று குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். உங்கள் செயல்பாடுகள் சமூக விழிப்புணர்வோடு இருக்கும். தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று வீண் செலவுகள் கொஞ்சம் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும், எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். பங்கு சந்தையில் உள்ளவர்களுக்கு இன்று ஏற்ற தாழ்வு இருக்கும். ஏற்றுமதி  துறையை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடும். கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிற ஆடையோ அல்லது கைக்குட்டையை எடுத்து சென்றால் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் வெற்றி பெறக் கூடியதாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |