தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தாரின் அற்ப ஆசைகளால் வெட்டி செலவு ஏற்படும். பணியாளர்கள் வீண் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கக் கூடும். என்னதான் உழைத்தாலும் ஆதாயம் உங்களுக்கு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு நிலுவையில் உள்ள பணம் வருவதில் கொஞ்சம் தாமதப்பட்டு தான் வரும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் கொஞ்சம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். கோபம் கொஞ்சம் தலை தூக்கும் பொறுமையாக செயல்படுங்கள்.
நிதானமாக செயல்படுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். சக மாணவரிடம் கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது சிவப்பு நிற ஆடையை அணிந்து செல்லுங்கள். அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு வாருங்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும் தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்