Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் வேட்பாளர் மனு தாக்கல்…. கிராம மக்கள் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ஊராட்சி மன்ற தலைவருக்கு பெண் மனு தாக்கல் செய்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி ஊராட்சியில் 551 பொதுப் பிரிவினர் மற்றும் 2889 மலைவாழ் மக்கள் என மொத்தமாக 3440 வாக்காளர்கள் இருக்கின்றனர். தற்போது நடைபெற்ற தேர்தல்களில் உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆதிதிராவிடர் ஒதுக்கப்பட்டு உள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் உள்பட அனைவரிடமும் தங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாகவும், தங்களின் பகுதிகளில் ஆதிதிராவிடர் தற்போது யாரும் இல்லாத நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர் இடஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் மனு அளித்துள்ளனர். அதன்பின் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளில் ஒருவர் கூட வேட்பு மனுவை தாக்கல் செய்யப்படவில்லை. இதனையடுத்து பெரியங்குப்பம் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட பெண்ணான இந்துமதி தற்போது வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதற்காக கூடுதல் ஆவணங்களை வேட்பு மனு தாக்கல் நேரம் முடிந்த பிறகு கொண்டு வந்ததினால் கோபம் அடைந்த கிராம மக்கள் அவரை அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல் கோஷங்களை எழுப்பி தங்கள் ஊருக்கு சம்பந்தம் இல்லாதவர் எனக்கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து துணை காவல்துறை சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன் ஆகியோர் இணைந்து மலைகிராம மக்களிடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மனு தாக்கல் செய்த வேட்பாளர் இந்துமதி என்பவரின் வீட்டில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |