Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்த மாநிலத்தில்… அக்டோபர் 4ஆம் தேதி முதல்… மீண்டும் பள்ளிகள் திறப்பு!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்..

கொரோனா காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன.. இதற்கிடையே அந்தந்த மாநில அரசு  தங்களது மாநிலத்தில் கொரோனா சற்று குறைந்தால் பள்ளிகளை வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறந்து பாடங்கள் நடத்தி வருகின்றது.. தமிழகத்தில் ஏற்கனவே செப்1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன..

அந்த வகையில் தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.. கிராமப்புறங்களில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.. மேலும் அவர், பள்ளிகள் திறப்புக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே, சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

 

Categories

Tech |